/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
4 ஆண்டாக புழுதி பறக்கும் சாலை நிரந்தர தீர்வு கிடைப்பது எப்போது?
/
4 ஆண்டாக புழுதி பறக்கும் சாலை நிரந்தர தீர்வு கிடைப்பது எப்போது?
4 ஆண்டாக புழுதி பறக்கும் சாலை நிரந்தர தீர்வு கிடைப்பது எப்போது?
4 ஆண்டாக புழுதி பறக்கும் சாலை நிரந்தர தீர்வு கிடைப்பது எப்போது?
ADDED : நவ 18, 2024 01:43 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதூர், சித்தாலப்பாக்கம், சிறுதாமூர், பினாயூர், பேரணக்காவூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் கல் குவாரிகள், கிரஷர் மற்றும் எம்.சாண்ட் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் இருந்து லோடு ஏற்றி செல்லும் லாரிகள், அருங்குன்றம், பட்டா, பழவேரி உள்ளிட்ட கிராம சாலைகள் வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை போன்ற பல பகுதிகளுக்கு செல்கின்றன.
இரவு, பகலாக தொடர்ந்து சென்று வரும் லாரிகளால், பேரணக்காவூர், பட்டா, அருங்குன்றம், பழவேரி உள்ளிட்ட பல்வேறு பகுதி சாலைகள் ஆங்காங்கே சேதமடைவதும், பின் மண் கொட்டி சீரமைப்பதும் தொடர்கதையாகி உள்ளது.
பழுதான இச்சாலைகளில், மண் புழுதி பறந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், இந்த சாலையில் பறக்கும் மண் புழுதியை கட்டுப்படுத்த, லாரி வாயிலாக தண்ணீர் ஊற்றும் நடவடிக்கையை, தொழிற்சாலை நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக புழுதி பறக்கும் சாலைகளில் தண்ணீர் ஊற்றும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அப்பகுதி சாலைகள் மேலும் சேதமாகி, பள்ளங்கள் பெரிதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதிகளில் சேதமடைந்து புழுதி பறக்கும் சாலைகளில், தண்ணீர் ஊற்றுவதற்கு மாறாக, நிரந்தர தீர்வு காணும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.