/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்று பால தடுப்புகள் : வெள்ளையடித்து புதுப்பிப்பு
/
பாலாற்று பால தடுப்புகள் : வெள்ளையடித்து புதுப்பிப்பு
பாலாற்று பால தடுப்புகள் : வெள்ளையடித்து புதுப்பிப்பு
பாலாற்று பால தடுப்புகள் : வெள்ளையடித்து புதுப்பிப்பு
ADDED : பிப் 20, 2025 12:43 AM

வாலாஜாபாத்,:பழையசீவரம் - திருமுக்கூடல் பாலாற்றின் குறுக்கே, பல ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. திருமுக்கூடல் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர், இந்த பாலத்தின் வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இந்த பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்ட தடுப்பு துாண்களில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, பழமையாக காட்சியளித்தது. இதனால், மின்விளக்கு வசதி இல்லாத இச்சாலையில், இரவு நேரங்களில் பாலத்தின் தடுப்புச்சுவர் தெரியாமல் விபத்தில் சிக்கி வந்தனர்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், பாலாற்று பால தடுப்பு துாண்கள் சீரமைக்கப்பட்டு, வெள்ளையடித்து புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.