/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்கூட்டர் மீது கிரேன் மோதி மனைவி பலி; கணவர் கை முறிவு
/
ஸ்கூட்டர் மீது கிரேன் மோதி மனைவி பலி; கணவர் கை முறிவு
ஸ்கூட்டர் மீது கிரேன் மோதி மனைவி பலி; கணவர் கை முறிவு
ஸ்கூட்டர் மீது கிரேன் மோதி மனைவி பலி; கணவர் கை முறிவு
ADDED : ஜன 31, 2025 08:26 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே எச்சூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனு, 40; கொத்தனர். இவரது மனைவி சத்யா, 35. இருவரும் கட்டுமான பணி செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, ‛டி.வி.எஸ்., ஸ்கூட்டி' இருசக்கர வாகனத்தில் வல்லம் -- வடகால் சிப்காட் சாலை வழியாக எச்சூர் சென்றனர்.
பால்நல்லுார் சந்திப்பு அருகே வந்த போது, பால்நல்லுாரில் இருந்து வந்த கிரேன் மோதியது. இதில், கிரேன் சக்கரத்தில் சிக்கி சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சீனுவின் வலது கையில் முறிவு ஏற்பட்டது.
அவ்வழியாக, வந்த வாகன ஓட்டிகள் சீனுவை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஒரகடம் போலீசார் சத்தியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.