/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அணைக்கட்டுதாங்கல் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
/
அணைக்கட்டுதாங்கல் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
அணைக்கட்டுதாங்கல் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
அணைக்கட்டுதாங்கல் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
ADDED : அக் 23, 2024 12:53 AM

குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சியில், அணைக்கட்டுதாங்கல் ஏரி உள்ளது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை ஆக்கிரமித்து, 800க்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இதனால், ஏரி இருக்கும் இடம் அடையாளமே மாறி, சமவெளி பகுதி போல் காட்சியளிக்கிறது. ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அங்கு கடந்து செல்லும் அடையாறு கால்வாய் குறுக்கே தடுப்பணை அமைத்து தண்ணீரை தேக்கி வைக்க, நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இதையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு, அணைக்கட்டுதாங்கல் ஏரியை இணைத்து, அடையாறு கால்வாய் குறுக்கே 11 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது.
ஏரியின் உள்ளே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றாததால், இந்த தடுப்பணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை.
இதனால், மழைநீர் வீணாக வெளியேறுகிறது.
எனவே, அணைக்கட்டுதாங்கல் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடுப்பணையில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.