/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க முன்வருவரா?
/
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க முன்வருவரா?
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க முன்வருவரா?
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க முன்வருவரா?
ADDED : நவ 04, 2024 03:39 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 50வது வார்டு, ஓரிக்கை, கோட்டை காவல் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால், கால்வாயில் மண் திட்டுகளாலும், செடி கொடிகள் புதர்போல மண்டியுள்ளதாலும், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள், கோட்டைகாவல் சாலையில், துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.