/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அனாதீன நிலங்களுக்கும் இம்முறை பட்டா வழங்கப்படுமா? வீடு கட்டியிருந்தால் உண்டு என்கிறது வருவாய் துறை
/
அனாதீன நிலங்களுக்கும் இம்முறை பட்டா வழங்கப்படுமா? வீடு கட்டியிருந்தால் உண்டு என்கிறது வருவாய் துறை
அனாதீன நிலங்களுக்கும் இம்முறை பட்டா வழங்கப்படுமா? வீடு கட்டியிருந்தால் உண்டு என்கிறது வருவாய் துறை
அனாதீன நிலங்களுக்கும் இம்முறை பட்டா வழங்கப்படுமா? வீடு கட்டியிருந்தால் உண்டு என்கிறது வருவாய் துறை
ADDED : ஏப் 18, 2025 08:13 PM
காஞ்சிபுரம்:தமிழகத்தில் இந்தாண்டு ஆட்பேசனையற்ற நிலங்களில் வசிக்கும், ஐந்து பேருக்கு, வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், கலெக்டர் அலுவலகங்களில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்திலும், பல்வேறு அரசு முகாம்களிலும் பட்டா கேட்டு ஏராளமான விண்ணப்பங்கள் குவிகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை புறநகர் பகுதியில் உள்ள, 'பெல்ட்' ஏரியா பகுதிகளில், 4,500 பேருக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பிற இடங்களிலும் ஆட்சேபனையற்ற இடங்களில் வசிக்கும் 2,000க்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட உள்ளன.
குறிப்பிட்ட சில நிலங்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில், மயானம், தோப்பு உள்ளிட்ட சில நிலங்களுக்கும் இம்முறை பட்டா வழங்கப்பட உள்ளது. இதனால், அனாதீன வகைப்பாட்டில் உள்ள நிலங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து வருகிறது.
அனாதீனை வகைப்பாட்டில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்கப்படுமா என, பலருக்கும் குழப்பம் இருந்து வரும் நிலையில், அந்த நிலங்களில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படும் என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், பல ஆண்டுகளாக அனுபவத்தில் இருக்கும் நிலங்களாகவும், பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் கொண்ட ஆனாதீன நிலங்களுக்கு மட்டும் ஏன் தருவதில்லை விவசாயிகள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
உதாரணமாக, கீழ்கதிர்பூர் கிராமத்தில், 100 விவசாயிகள், பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். தமிழக அரசு இம்முறை தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
பல்வேறு வகையான நிலங்களுக்கும் பட்டா அரசு முன்வரும்போது, இனாம் வகைப்பாட்டில் உள்ள எங்கள் நிலங்களுக்கும் ஏன் பட்டா கொடுக்கக்கூடாது. கீழ்கதிர்பூர் கிராமத்தில், இனாம் நிலங்கள், அனாதீன வகைப்பாடாக மாற்றப்பட்டது.
ஆட்சேபனையற்ற இனாம் நிலங்களுக்கும் பட்டா கொடுக்க வேண்டும். 25 ஆண்டுகளாக இதற்காக நாங்கள் போராடி வருகிறோம். தமிழக அரசு ஆயிரக்கணக்கான பட்டாக்கள் இம்முறை வழங்க ஏற்பாடு செய்யும்போது, கீழ்கதிர்பூர் கிராம விவசாயிகளுக்கு, பட்டா வேண்டும்.
-- கே.ரமேஷ்,
செயலர்,
கீழ்கதிர்பூர் கிராம விவசாயிகள் நலச்சங்கம்.