/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கட்டவாக்கத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்தப்படுமா?
/
கட்டவாக்கத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்தப்படுமா?
ADDED : நவ 27, 2024 11:06 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில், கட்டவாக்கம் கிராமம் உள்ளது. இப்பகுதியினர், கட்டவாக்கம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து, வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இப்பேருந்து நிறுத்தத்தில் ஏற்கனவே இருந்த பயணியற் நிழற்குடை, சாலை விரிவாக்கப் பணியின் போது, இடித்து அகற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து, இதுவரை நிகழற்குடை வசதி ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால், அப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்கு காத்திருக்கும் பள்ளி, கல்லுாரி, மாணவ - மாணவியர், தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், மழை மற்றும் வெயில் நேரங்களில் அவதிபடுகின்றனர்.
எனவே, கட்டவாக்கம் கிராம பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை கட்டட வசதி ஏற்படுத்த அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.