/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் திட்டுகளால் தூர்ந்த அழிசூர் ஏரி தூர்வாரப்படுமா?
/
மண் திட்டுகளால் தூர்ந்த அழிசூர் ஏரி தூர்வாரப்படுமா?
மண் திட்டுகளால் தூர்ந்த அழிசூர் ஏரி தூர்வாரப்படுமா?
மண் திட்டுகளால் தூர்ந்த அழிசூர் ஏரி தூர்வாரப்படுமா?
ADDED : ஏப் 09, 2025 01:15 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, அழிசூர் கிராமத்தில், 180 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்த ஏரி தண்ணீரை பயன்படுத்தி, 300 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது, ஏரி முறையாக பராமரிப்பு இல்லாததால், மண் திட்டுகளால் தூர்ந்த நிலையில் உள்ளது. இதனால், மழை நேரங்களில் நீர்ப்பிடிப்பு பகுதியில், போதுமான அளவு நீர் சேகரமாக முடியாத நிலை உள்ளது.
இந்த ஏரியில் முள்செடிகள் அதிகளவு வளர்ந்து வருவதால், ஏரிக்கு மழை நீர் வருவதில் ஆங்காங்கே தடை ஏற்பட்டு வருகிறது.
இதனால், விவசாயிகள் ஏரி தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, ஏரியை தூர்வாரி மழைநீரை சேமிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.