/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செடிகள் வளர்ந்துள்ள வடிகால்வாய் துார்வாரப்படுமா?
/
செடிகள் வளர்ந்துள்ள வடிகால்வாய் துார்வாரப்படுமா?
ADDED : ஆக 11, 2025 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், கோகுலம் வீதியில், மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
முறையாக பராமரிக்காததால், மண் திட்டுகளாலும், கால்வாயில் வளர்ந்துள்ள செடிகளாலும், இந்த கால்வாய் துார்ந்து உள்ளது.
பலத்த மழை பெய்தால், கால்வாய் வழியாக செல்ல வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் கோகுலம் வீதியில், மழைநீர் தடையின்றி செல்லும் வகையில், கால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.ரவிகுமார்,
காஞ்சிபுரம்.