/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா?
/
மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா?
ADDED : செப் 23, 2025 12:27 AM

உ த்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கம் கிராமத்தில், திருப்புலிவனம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தி ல் மின் கம்பங்கள் நடப்பட்டு, அங்குள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இங்குள்ள மின் கம்பம் ஒன்றில் கொடிகள் படர்ந்துள்ளன. இதனால், அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
மேலும், செடிகளில் மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்புள்ளதால், அருகில் செல்வோர் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் நிலை உள்ளது.
எனவே, மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- எம். முனுசாமி, குண்ணவாக்கம்.