/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வனப்பகுதியில் புதிய சாலை மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
/
வனப்பகுதியில் புதிய சாலை மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
வனப்பகுதியில் புதிய சாலை மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
வனப்பகுதியில் புதிய சாலை மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
ADDED : பிப் 05, 2024 06:45 AM

குன்றத்துா :குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையையும், சோமங்கலம் - தாம்பரம் நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் சோமங்கலம் - புதுப்பேடு சாலை உள்ளது.
இந்த சாலையில், சோமங்கலம் அருகே, மேலத்துார் முதல், சக்தி நகர் வரை வன பகுதி உள்ளது.
குண்டும், குழியுமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சாலை சீரமைக்க, வனத்துறை அனுமதி கிடைக்க தாமதமானது.
மோசமான சாலையால், இந்த வழியே குன்றத்துார் - சோமங்கலம் சென்று வந்த அரசு பேருந்து நிறுத்தப்பட்டது. இதற்கு மாற்றாக குன்றத்துாரில் இருந்து நல்லுார், சோமங்கலம் வழியே தாம்பரத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது.
இதனால், பூந்தண்டலம் ஊராட்சி மக்கள் 5 கி.மீ., துாரம் சென்று புதுப்பேடு அல்லது மேலத்துார் பகுதியில் அரசு பேருந்தை பிடிக்க வேண்டி இருந்தது.
இந்நிலையில், வனத்துறை அனுமதி கிடைத்ததால், புதுப்பேடு - சோமங்கலம் சாலை 5.10 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலையாக, நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளனர்.
எனவே, குண்டும், குழியுமான சாலை என, காரணம் காட்டி நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை, இந்த வழியே மீண்டும் இயக்க வேண்டும் என, பூந்தண்டலம் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

