/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆரம்ப சுகாதார நிலையம் கட்டியம்பந்தலில் அமையுமா?
/
ஆரம்ப சுகாதார நிலையம் கட்டியம்பந்தலில் அமையுமா?
ADDED : டிச 22, 2024 07:29 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் கட்டியாம்பந்தல் கிராமத்தைச் சுற்றிலும் பெருங்கோழி, சிறுங்கோழி, சின்னமாங்குளம், பம்பையம்பட்டு, நாஞ்சிபுரம், காட்டுகொல்லை, மேட்டுக்கொல்லை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களைச் சேர்ந்தோர், மருத்துவ சிகிச்சைக்காக 10 கி.மீ., தூரத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டார அரசு மருத்துவமனை அல்லது 15 கி.மீ., தூரத்தில் உள்ள மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
இதனால், நோய்வாய்ப்படும் நேரங்களில் உடனடி மருத்துவ வசதி கிடைக்காமல் நோயாளிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வசிப்பிடத்திற்கு அருகே மருத்துவமனை இல்லாததால், விபத்து உள்ளிட்ட ஆபத்தான நேரங்களில் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தில், உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிருக்கு போராடும் நிலை உள்ளது.
எனவே, இக்கிராமங்களுக்கு மத்தியில் உள்ள கட்டியாம்பந்தல் கிராமத்தை மையமாக கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.