/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிரஷர்களில் இருந்து செல்லும் லாரிகளால் புழுதி பறக்கும் சாலை சீரமைக்கப்படுமா?

UPDATED : ஏப் 03, 2025 02:12 AM
ADDED : ஏப் 03, 2025 01:39 AM

உத்திரமேரூர்:பினாயூரில் சேதமடைந்த சாலையில் கிரஷர், எம்.சாண்ட் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கின்றன.
உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி கிராமத்தில் இருந்து, பினாயூர் வழியாக, திருமுக்கூடல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, குருமஞ்சேரி, சாத்தணஞ்சேரி, பினாயூர் கிராமங்களைச் சேர்ந்தோர் வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் கல் குவாரி, கிரஷர்களில் இருந்து ஜல்லிகள், எம்.சான்ட் ஆகியவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய பகுதிகளுக்கு, இச்சாலை வழியாக லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
தொடர்ந்து, லாரிகள் அதிக பாரத்துடன் செல்வதால் சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியவில்லை.
மேலும், லாரிகள் செல்லும்போது சாலையில் கிளம்பும் புழுதியால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.