/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகத்தடை, வழிகாட்டி பலகை கரூர் கூட்டுச்சாலையில் அமைக்கப்படுமா?
/
வேகத்தடை, வழிகாட்டி பலகை கரூர் கூட்டுச்சாலையில் அமைக்கப்படுமா?
வேகத்தடை, வழிகாட்டி பலகை கரூர் கூட்டுச்சாலையில் அமைக்கப்படுமா?
வேகத்தடை, வழிகாட்டி பலகை கரூர் கூட்டுச்சாலையில் அமைக்கப்படுமா?
ADDED : செப் 26, 2024 11:37 PM

வாலாஜாபாத்:சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ராஜகுளம் பேருந்து நிறுத்தம் உள்ளது. வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராமவாசிகள், ஊத்துக்காடு, புத்தாகரம் போன்ற கிராம சாலைகள் வழியாக ராஜகுளம் பகுதிக்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இச்சாலையில், கரூர் கூட்டுச்சாலை உள்ளது. கரூர் கூட்டுச்சாலையில் இருந்து, ஏனாத்தூர் வழியாக காஞ்சிபுரம் செல்வதற்கான சாலையும், புத்தகரம் வழியாக வாலாஜாபாத்திற்கான மற்றொரு சாலையும் மற்றும் ராஜகுளம் செல்லும் சாலையும் பிரிகின்றன.
மூன்று சாலைகள் இணையும் இக்கூட்டுசாலை பகுதியில், வாகனங்கள் அதிவேகமாக வருவதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும், இக்கூட்டுசாலை பகுதியில், வழிகாட்டி பலகை இல்லாததால், இச்சாலை வழியாக பயணிப்போர் வழிமாறி செல்லும் நிலை ஏற்படுகிறது.
எனவே, கரூர் கூட்டுச்சாலையில், மூன்று சாலைகளுக்கான இணைப்புகளிலும் வேகத்தடை ஏற்படுத்துவதோடு வழிகாட்டிப் பலகை அமைக்க நடவடிக்கை வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.