/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கீவளூர் ஊராட்சியில் உறிஞ்சி குழி பராமரிக்கப்படுமா?
/
கீவளூர் ஊராட்சியில் உறிஞ்சி குழி பராமரிக்கப்படுமா?
கீவளூர் ஊராட்சியில் உறிஞ்சி குழி பராமரிக்கப்படுமா?
கீவளூர் ஊராட்சியில் உறிஞ்சி குழி பராமரிக்கப்படுமா?
ADDED : ஜன 09, 2024 12:38 AM

இருங்காட்டுக்கோட்டை : கீவளூர் ஊராட்சியில் கழிவுநீரை வடிக்கட்டும் அமைப்பான கிடைமட்ட உறிஞ்சி குழியை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க 'கிரே வாட்டர் சிஸ்டம்' திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில், நீர்நிலைகளில் கழிவுநீர் கலக்கும் இடத்தில் கிடைமட்ட உறிஞ்சு குழிகள் அமைக்கப்படுகின்றன. இந்த உறிஞ்சி குழியில் ஜல்லிக்கற்கள், கிராவல் மண், மரக்கறி, மணல் உள்ளிட்டவை அடுக்கடுக்காக கொட்டப்பட்டுள்ளன.
இதில் ஒரு புறத்தில் புகும் கழிவுநீர், மறுபுறத்தில் வருவதற்குள் இயற்கையாக வடிகட்டப்பட்டு தெளிவான நீராக குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கலக்கும். இந்த திட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் பல ஊராட்சிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கீவளூர் ஊராட்சியில் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 1 லட்சத்து 35,000 ரூபாய் மதிப்பில் கிடைமட்ட உறிஞ்சி குழி 2022ல் அமைக்கப்பட்டது. இந்த உறிஞ்சி குழிக்குள் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.
கழிவுநீர் உறிஞ்சி குழி வடிப்பான் வழியாக செல்லாமல் அதன் அருகே உள்ள காலி இடத்தின் வழியாக சென்று நேரடியாக குளத்தில் கலக்கிறது.
இதனால், குளத்துநீர் மாசடைந்துள்ளது. இந்த உறிஞ்சி குழி வழியே கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.