/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைக்கு ஒழுகும் அங்கன்வாடி கான்கிரீட் கட்டடம் வருமா?
/
மழைக்கு ஒழுகும் அங்கன்வாடி கான்கிரீட் கட்டடம் வருமா?
மழைக்கு ஒழுகும் அங்கன்வாடி கான்கிரீட் கட்டடம் வருமா?
மழைக்கு ஒழுகும் அங்கன்வாடி கான்கிரீட் கட்டடம் வருமா?
ADDED : பிப் 05, 2025 12:15 AM

நல்லுார்:வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சி, நல்லுார் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில், ஓடு வேய்த கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
அங்கன்வாடி மைய கட்டடத்தின் கூரை ஓடு வேயப்பட்டுள்ளதால், மழைக்காலத்தில் கூரை வழியாக கட்டடத்திற்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனால், குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே, நல்லுாரில் ஓடு வேயப்பட்ட கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்திற்கு கான்கிரீட் கட்டடம் கட்ட வையாவூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.