/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'டயாலிசிஸ்' சிகிச்சைக்கு அைலச்சல் வாலாஜாபாத், உத்திரமேரூரில் அமையுமா?
/
'டயாலிசிஸ்' சிகிச்சைக்கு அைலச்சல் வாலாஜாபாத், உத்திரமேரூரில் அமையுமா?
'டயாலிசிஸ்' சிகிச்சைக்கு அைலச்சல் வாலாஜாபாத், உத்திரமேரூரில் அமையுமா?
'டயாலிசிஸ்' சிகிச்சைக்கு அைலச்சல் வாலாஜாபாத், உத்திரமேரூரில் அமையுமா?
ADDED : டிச 26, 2024 01:05 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், சிறுநீரகம் செயல் இழந்தவர்களுக்காக, 'டயாலிசிஸ்' சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தினமும் காலை 7:00 மணிக்கு முதல் ஷிப்டும், மதியம் 12:00 மணிக்கு இரண்டாவது ஷிப்டும், இரவு 7:00 மணிக்கு மூன்றாவது ஷிப்ட் என, மூன்று வேலைகளில், 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் இரண்டு இயந்திரங்கள் வாயிலாக, 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆனால், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய தாலுகா மருத்துவமனைகளில் 'டயாலிசிஸ்' இயந்திரங்கள் இல்லாததால், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கிராமங்களில் வசிக்கும் நோயாளிகள், நெடுந்தொலைவில் இருந்து 'டயாலிசிஸ்' சிகிச்சை பெற, காஞ்சிபுரம் வந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து, ஒரு மணி நேரம் பயணித்து காஞ்சிபுரம் வருவதோடு, நான்கு மணி நேரம் 'டயாலிசிஸ்' சிகிச்சை பெற்று வீடு திரும்ப மிகுந்த சிரமமாக இருப்பதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் வீடு திரும்புவது சிரமமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இரு இடங்களில் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் மட்டுமே 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தாலுகா அரசு மருத்துவமனைகளில், இந்த சிகிச்சை அளிக்கப்படாததால், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், அரசு மருத்துவமனையை பலரும் நம்பியுள்ளனர்.
வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய இரண்டு தாலுகா மருத்துவமனைகளிலும், தலா இரு 'டயாலிசிஸ்' இயந்திரங்களை கொண்டு, 'டயாலிசிஸ்' சிகிச்சையை துவக்க, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

