/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலவாக்கம் சாலையில் வேகத்தடை அமையுமா?
/
சாலவாக்கம் சாலையில் வேகத்தடை அமையுமா?
ADDED : ஜன 14, 2025 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், சாலவாக்கம் செல்லும் சாலை உள்ளது. திருப்புலிவனம் பகுதியில் போதிய வேகத்தடை இல்லாததால், வேகமாக வரும் வாகனங்களால் தொடர்ந்து விபத்து ஏற்படுகிறது.
குறிப்பாக, இந்த சாலையில், பாவோடும்தோப்பு தெரு மற்றும் சன்னிதி தெரு ஆகியவை இணையும் இடத்தில், வேகத்தடை அமைக்க, அப்பகுதிவாசிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே, அப்பகுதியில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அறிவழகன், திருப்புலிவனம்.