/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நகை திருடி சொகுசு வாழ்க்கை கைவரிசை காட்டிய பெண் கைது
/
நகை திருடி சொகுசு வாழ்க்கை கைவரிசை காட்டிய பெண் கைது
நகை திருடி சொகுசு வாழ்க்கை கைவரிசை காட்டிய பெண் கைது
நகை திருடி சொகுசு வாழ்க்கை கைவரிசை காட்டிய பெண் கைது
ADDED : டிச 05, 2024 02:15 AM

அண்ணா நகர், வேலை பார்த்த வீட்டிலேயே சிறுக, சிறுக 30 சவரன் நகைகளைதிருடிய பணிப்பெண்னை, போலீசார் கைது செய்து, அவரது கணவரை தேடி வருகின்றனர்.
ஷெனாய் நகர்,கிரசண்ட் சாலையைசேர்ந்தவர் நீரஜா, 31.பள்ளிக்கல்வித்துறைஅலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார்.
இவர், சில மாதங்களுக்கு முன், வீட் டில் இருந்த நகைகளை சோதித்த போது, 30 சவரன் நகைகள், சில வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது.
வேலையில் இருந்து நின்ற பணிப்பெண் மீது சந்தேகம் இருப்பதாக கூறி, அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார்.
சேத்துப்பட்டு, மனோகரன் தெருவைச் சேர்ந்த லட்சுமி பவானி, 30, என்ற பணிப்பெண், இரு ஆண்டு களுக்கு முன், நீரஜாவின் 2 வயது குழந்தையை கவனிப்பதற்காக பணியில் சேர்ந்துள்ளார். அப் படியே, வீட்டு வேலைகளை செய்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எல்லாம், பிரோவில் இருந்த நகைகளை சிறுக, சிறுக திருடி, கணவரிடம் கொடுத்துள்ளார்.
சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சில மாதங்களுக்கு முன் வேலையில் இருந்து நின்றுள்ளார்.திருடிய நகைகளை கணவருடன் சேர்ந்து, தனியார் நிறுவனத்தில் அடக்கு வைத்து, தவணையில் கார் உள்ளிட்டவை வாங்கி, ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
போலீசார் நேற்றுலட்சுமி பவானியை கைது செய்து, அவரிடமிருந்து, 15.3 கிராம் நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான அவரது கணவரை தேடி வருகின்றனர்.