/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரபல கடையில் நகை திருடிய பெண் கைது
/
பிரபல கடையில் நகை திருடிய பெண் கைது
ADDED : பிப் 16, 2025 02:41 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நெல்லுக்கார தெருவில் பிரபல தங்க நகை கடை இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 11 ம் தேதி பெண் ஒருவர், நகைகள் வாங்குவது போல், கடைக்கு வந்துள்ளார்.
அப்போது, நகைகள் பலவற்றை பார்த்து விட்டு எழுந்து சென்றுள்ளார். அதன்பிறகு, நகைகளை கடை ஊழியர்கள் சரிபார்த்தபோது, அதில் டயமன்ட் கை சங்கிலி, மோதிரம் ஒன்று, கம்மல் ஒன்று என, 21 கிராம் எடையுள்ள 2.5 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, கடையின் மேலாளர் சீனிவாசன் சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். கடையின் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த ரமாதேவி,48. என்பது தெரியவந்தது. போலீசார் பெண்ணை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.