/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
/
ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
ADDED : நவ 20, 2025 04:17 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே, ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததில் பெண் குழந்தை பிறந்தது.
உத்திரமேரூர் தாலுகா, திருப்புலிவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதுமதி, 21. நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு நேற்று மதியம் 2:30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரது உறவினர்கள், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர்.
பின், விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மதுமதியை ஏற்றிக் கொண்டு, காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது.
ஆம்புலன்ஸ் வாகனம் மாகரல் அருகே சென்ற போது அப்பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தது.
இதையறிந்த, ஆம்புலன்ஸ் டிரைவர் சாந்தமூர்த்தி வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார்.
மருத்துவ உதவியாளர் குணசீலன், பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததையடுத்து, சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது.
பின், தாய் மற்றும் குழந்தை, காஞ்சிபுரம் அரசு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

