ADDED : நவ 20, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாதாள சாக்கடையில் அடைப்பு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
சி ன்ன காஞ்சிபுரம், வேகவதி ஆறு சாலை வழியாக, தேனம்பாக்கம், சதாவரம், சித்தி விநாயகர் பூந்தோட்டம், தும்பவனம், டெம்பிள் சிட்டி, டி.கே.நம்பி தெரு உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், மகளிர் கல்லுாரி அருகில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, இரு நாட்களாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.
தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், இப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம். தனபாக்கியம், காஞ்சிபுரம்.

