/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டூ - வீலரில் சென்ற பெண் கார் மோதி உயிரிழப்பு
/
டூ - வீலரில் சென்ற பெண் கார் மோதி உயிரிழப்பு
ADDED : மார் 18, 2025 12:16 AM
ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரம் அடுத்த, ஓ.எம்., மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசாராம், 50. அதே பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுந்தரி தேவி, 45.
இவர், நேற்று முன்தினம் மாலை, உறவினர் மகன் மனிஷ், 18, என்பருடன், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில், வீட்டில் இருந்து அடகு கடைக்கு சென்றனர்.
தக்கோலம் சாலையில், ஓ.எம்., மங்கலம் பகுதியில் உள்ள கேசாராம் வீட்டின் அருகே சென்ற போது, அதே திசையில் வந்த, 'இன்னோவா' கார், ஸ்கூட்டரின் பின்னால் மோதியது.
இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்ததில் சுந்தரி தேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனிஷ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சுங்குவார்சத்திரம் போலீசார், சுந்தரி தேவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து, கார் டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.