/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையை சீரமைக்க நாற்று நடும் போராட்டம் நடத்திய பெண்கள்
/
சாலையை சீரமைக்க நாற்று நடும் போராட்டம் நடத்திய பெண்கள்
சாலையை சீரமைக்க நாற்று நடும் போராட்டம் நடத்திய பெண்கள்
சாலையை சீரமைக்க நாற்று நடும் போராட்டம் நடத்திய பெண்கள்
ADDED : நவ 08, 2025 01:08 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, துணை மேயர் வார்டில், சாலையை சீரமைக்க கோரி, அப்பகுதி பெண்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 22வது வார்டில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி செய்து தரக்கோரி அப்பகுதி காங்., கவுன்சிலரும், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயருமான குமரகுருநாதனிடம் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை தெரிவித்துள்ளனர். இருப்பினும் சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லை.
தொடர் மழை காரணமாகவும் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சகதியும் நீரும் சேர்ந்து, அப்பகுதி விளைநிலம் போல காணப்படுகிறது.
எம்.ஜி., சக்கரபாணி தெருவில் வசிப்போர், பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர் சாலையில் நடக்கக்கூட முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி சாலையை கடந்து வருகின்றனர்.
எனவே இப்பகுதியில் சாலையை சீரமைக்க கோரி, அப்பகுதி பெண்கள் நாற்று நடும் போராட்டத்தை நேற்று நடத்தினர்.
தகவலறிந்து அங்கு வந்த, காஞ்சி தாலுகா போலீசார், பெண்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

