/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கீழம்பி நான்குவழிச் சாலையில் மைய தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்
/
கீழம்பி நான்குவழிச் சாலையில் மைய தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்
கீழம்பி நான்குவழிச் சாலையில் மைய தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்
கீழம்பி நான்குவழிச் சாலையில் மைய தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்
ADDED : ஜூன் 11, 2025 01:08 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தில் இருந்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கீழம்பி செல்லும் புறவழிச் சாலை உள்ளது.
இச்சாலையில், அதிக பாரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனங்களால், பல இடங்கள் சேதமடைந்தும், புழுதி பறக்கும் சாலையாகவும் மாறியது. மேலும், இச்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இருவழிச் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, செவிலிமேடு -- கீழம்பி புறவழிச் சாலையை, நான்குவழிச் சாலையாக மாற்றும் பணி, கடந்த பிப்., மாதம் துவங்கியது. தற்போது, சாலை அலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சாலையில் மைய தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செவிலிமேடு -- கீழம்பி புறவழிச்சாலை 8 கி.மீ., நீளமும், 10 மீட்டர் அகலம் கொண்டது. இச்சாலையை, முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 16.2 மீட்டர் அகலத்திற்கு சாலை அகலப்படுத்தும் பணி செய்யும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இதில், சாலையோரம் இடையூறாக மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, இச்சாலையின் குறுக்கே செல்லும் 37 சிறுபாலங்களில், 30 சிறுபாலம் அகலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, சாலையில் கான்கிரீட் மைய தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், மையத்தில் மலர் செடிகள் அமைக்கும் பணியும்,. தொடர்ந்து தார்ச்சாலை அமைக்கும் பணியும் துவங்கும்.
வரும் 2026ம் ஆண்டு, பிப்., மாதத்திற்குள், நான்குவழிச் சாலை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், சாலை விரிவாக்க பணியை தீவிரப்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.