/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி அல்லாபாத் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி துவக்கம்
/
காஞ்சி அல்லாபாத் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி துவக்கம்
காஞ்சி அல்லாபாத் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி துவக்கம்
காஞ்சி அல்லாபாத் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி துவக்கம்
ADDED : ஜூன் 26, 2025 11:28 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரியில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, ஏரிக்கரை பலப்படுத்தும் பணி துவங்கியது.
காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லையில் உள்ள அல்லாபாத் ஏரி 100 ஏக்கரில் அமைந்துள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், ஏரி முழுதும் சீமை கருவேல மரங்கள் காடுபோல் வளர்ந்து இருந்தது. இந்த ஏரியை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகமும், 'எக்ஸ்னோரா' தன்னார்வ அமைப்பும் இணைந்து அல்லாபாத் ஏரியை துார்வாரி சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி மூன்று பொக்லைன் இயந்திரம் வாயிலாக ஏரியில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் நேற்று அகற்றப்பட்டன.
தொடர்ந்து ஏரிக்கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், துார்வாரும் பணி நடைபெறும் என, தன்னார்வ அமைப்பினர் தெரிவித்தனர்.