/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மானாம்பதியில் பஸ் நிலையம் அமைக்கும் பணி மும்முரம்
/
மானாம்பதியில் பஸ் நிலையம் அமைக்கும் பணி மும்முரம்
ADDED : ஏப் 04, 2025 01:15 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில், உத்திரமேரூரில் இருந்து, வந்தவாசி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர், பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த பேருந்து நிறுத்தத்தில், சென்னை, திருவண்ணாமலை, செய்யாறு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பேருந்துகள் நின்று செல்கின்றன. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்தோர் மானாம்பதி கிராமத்தில் பேருந்து நிலையம் அமைக்கக்கோரி, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2024 -- 25ம் நிதி ஆண்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 21 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டும்பணி, இரு மாதத்திற்கு முன் துவக்கப்பட்டது. தற்போது, புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் உள்ள இரும்பு தூண்கள் மீது கூரை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.