/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் ரூ.60 கோடியில் 12 அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்

ADDED : நவ 28, 2025 04:41 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே, பல்லவன் நகரில், 60 கோடி ரூபாய் மதிப்பில், 12 அடுக்குமாடி கொண்ட 83 குடியிருப்புகளை, வீட்டுவசதி வாரியம் கட்டி வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செவிலிமேடு அருகே பல்லவன் நகர் உள்ளது.
இங்கு, அரசு ஊழியர்களுக்கு கட்டப்பட்டிருந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, வேலுார் வீட்டுவசதி வாரியம் பிரிவு சார்பில், 12 தளங்கள் கொண்ட குடியிருப்புகள் 60.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப் பட்டது.
இதற்கான நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கட்டடம் கட்டுவதற்கு கைத்தறி துறை அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்.
ஒரு ஏக்கர் பரப்பளவிலான இந்த இடத்தில், 1.05 லட்சம் சதுரடி கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது.
குடியிருப்புகளில், 48 இரண்டு படுக்கை அறை கொண்ட வீடுகள் 71.31 முதல் 78.97 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 35 மூன்று படுக்கை அறை கொண்ட வீடுகள் 99.1 லட்சம் ரூபாய் மதிப்பிலும் என, மொத்தம் 83 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
குடியிருப்புக்கு அடித்தளம் இட்டு, துாண்கள் கட்டும் பணிகள் தற்போது நடக்கின்றன. அடுத்த இரு ஆண்டுகள் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.