/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செங்கை - காஞ்சி நெடுஞ்சாலையில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்
/
செங்கை - காஞ்சி நெடுஞ்சாலையில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்
செங்கை - காஞ்சி நெடுஞ்சாலையில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்
செங்கை - காஞ்சி நெடுஞ்சாலையில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : மே 18, 2025 02:28 AM

வாலாஜாபாத்:சென்னை -- கன்னியாகுமாரி தொழிற்தடம்திட்டம் சார்பில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை விரிவாக்க பணி, இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகிறது.
ஏற்கனவே, 21 அடி அகலமாக இருந்த இச்சாலை, தற்போது 50 அடியாக அகலப்படுத்தப்பட்டுவருகிறது.
இதற்காக, 2022ம் ஆண்டு, 39 கி. மீ., துாரத்திற்கான சாலை அகலப்படுத்துதல் மற்றும் புதிய பாலங்கள் அமைத்தல், தேவையான இடங்களில் கான்கிரீட் தடுப்பு ஏற்படுத்துதல், வடிகால்வாய் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், செங்கல்பட்டில் இருந்து, வாலாஜாபாத் அருகாமையில் உள்ள புளியம்பாக்கம் வரை மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து, வெண்குடி வரையிலான சாலைகளில் 90 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளன.
மேலும், இச்சாலையில் விரிவாக்கப் பணி முடிவுற்ற பகுதி பேருந்து நிறுத்தங்களில், பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்துதல் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விரிவாக்கப் பணி முடிவுற்ற பகுதிகளில், சாலையோர கான்கிரீட் சுவர் இடையிலும் மற்றும் சாலையின் மைய தடுப்புகளிலும் மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால், காஞ்சி - செங்கை சாலையில்,மின்வசதி ஏற்பட்டு இருள் சூழந்து வந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என, அப்பகுதியினர் தெரிவித்தனர்.