/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தனியார் வேலைவாய்ப்பு 37 பேருக்கு பணி ஆணை
/
தனியார் வேலைவாய்ப்பு 37 பேருக்கு பணி ஆணை
ADDED : ஜன 25, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்டநிர்வாகம் இணைந்து, தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.
இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கு, வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்து,தனியார் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்தார்.
இதில், 21 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில், 119 நபர்களில், 37 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டன.
மேலும், 73 பேருக்கு இரண்டாம்கட்டநேர்முக தேர்வு நடைபெற உள்ளது என, வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள்தெரிவித்தனர்.

