/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள்...தீவிரம்!:கடன், மானியம், மின் இணைப்பு போன்ற சலுகை பெறலாம்
/
விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள்...தீவிரம்!:கடன், மானியம், மின் இணைப்பு போன்ற சலுகை பெறலாம்
விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள்...தீவிரம்!:கடன், மானியம், மின் இணைப்பு போன்ற சலுகை பெறலாம்
விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள்...தீவிரம்!:கடன், மானியம், மின் இணைப்பு போன்ற சலுகை பெறலாம்
ADDED : பிப் 11, 2025 09:11 PM

காஞ்சிபுரம்:அரசின் திட்டங்களில் பயன்பெறவும், வங்கிகளில் கடன் பெறவும், விவசாயிகளுக்கு மத்திய அரசு அடையாள அட்டை வழங்க உள்ளது. வேளாண் அடுக்கக இணையத்தில் பதிவு செய்யும் பணியை, காஞ்சி மாவட்ட வேளாண் துறையினர் துவக்கியுள்ளனர். இதன் வாயிலாக கடன், மானியம் உள்ளிட்ட அனைத்து பயன்களும் எளிமையாக பெறலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 1.33 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில், 85,000 ஏக்கர் நிலங்களில், நெல், காய்கறி உள்ளிட்ட பலவித பயிர்களை, 65,800 விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதுபோன்ற விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் கவுரவ உதவித்தொகை மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள், வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கி, மத்திய - மாநில அரசு ஊக்குவித்து வருகிறது.
மத்திய அரசு வழங்கும், பிரதமர் கவுரவ உதவித்தொகை, விவசாயி அல்லாத நபர்களுக்கு சென்றுவிடக்கூடாது என, இ.கே.ஒய்.சி., என அழைக்கப்படும் இணையவழியில் பதிவு செய்து, மத்திய அரசு கவுரவ நிதியை, விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கி வருகிறது.
அதேபோல், விதைகள், வேளாண் கருவிகள் என, அனைத்து வித சலுகைகளும் ஆதார் அட்டை, விவசாயிகளின் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
மத்திய - மாநில அரசு திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளே, மீண்டும் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். விழிப்புணர்வு இல்லாத சிறு, குறு விவசாயிகள் பயன்பெற முடியவில்லை. மேலும், இதுபோன்ற விவசாயிகளுக்கு வங்கி கடனும் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு, வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் சுயவிபரங்களை பதிவேற்றம் செய்யும் பணியை வேளாண் துறை துவக்கி உள்ளது.
இதில், வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், வேளாண் தொழில் நுட்பத்தினர், உதவி தோட்டக்கலை அலுவலர், மகளிர் குழுவினர் ஆகியோர் தனித்தனியாக வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, விபரங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்த பதிவேற்றத்தின் வாயிலாக அனைத்து தரப்பு விவசாயிகளின் சுயவிபரங்கள், ஒரே அடையாள அட்டையில் வந்துவிடும். இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி மத்திய - மாநில அரசு அறிவிக்கும் திட்டங்களில் பயன்பெறலாம். மேலும், வேளாண் இயந்திரங்கள், வேளாண் வங்கி கடன் ஆகியவை பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் கூறியதாவது:
மத்திய அரசின் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிக்கு, விவசாயிகளின் விபரங்களை வேளாண் துறை அலுவலர்கள் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.
முதற்கட்டமாக, பிரதமர் கவுரவ நிதி பெறும் விவசாயிகளின் விபரங்களை பதிவேற்றம் செய்து வருகிறோம். அதன்பின் சிறு, குறு உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் விபரமும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
மேலும், நாளை மறுநாள் வரை, அந்தந்த கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடந்த உள்ளோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விவசாயிகள் ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் எண், சிட்டா, அடங்கல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேளாண் மின் இணைப்பு பெற விவசாயி என சான்று பெற தேவையில்லை. இந்த அடையாள அட்டை இருந்தா