/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'‛ரோடு ரோலர்' அடியில் சிக்கி தொழிலாளி பலி
/
'‛ரோடு ரோலர்' அடியில் சிக்கி தொழிலாளி பலி
ADDED : ஆக 03, 2025 10:42 PM
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரத்தில், மேம்பாலத்தின் மீது சாலை அமைக்கும் பணியின் போது, ரோடு ரோலர் அடியில் படுத்து ஓய்வெடுத்த தொழிலாளி இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிக்கி பிஷ்வாஸ், 21. இவர் ஸ்ரீபெரும்புதுார் அருகே தங்கி, சென்னை -- பெங்களூரு தேசிய நெஞ்சாலையில், சுங்குவார்சத்திரத்தில் மேம்பாலம் கட்டுமான ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.
பிக்கி பிஷ்வாஸ் நேற்று காலை வழக்கமாக வேலைபார்த்து கொண்டிருக்கும் போது, காலை உணவு அருந்திய பின், மேம்பாலத்தின் மீது சாலை அமைக்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலர் கீழ் படுத்து ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.
இதை கவனிக்காத ரோடு ரோலர் ஓட்டுநர், இயந்திரத்தை முன்னோக்கி இயக்கினார். இதில், ரோடு ரோலர் இயந்திரத்தின் கீழ் படுத்திருந்த பிக்கி பிஷ்வாஸ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சுங்குவார்சத்திரம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய ரோடு ரோலர் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.