நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில், மண் வள தின விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் தலைமை வகித்தார். உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் சுமதி மண்வளம் குறித்து விழிப்புணர்வு பாடலை ஒலிக்க செய்தார்.
முசரவாக்கம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், மண்ணின் முக்கியத்துவம் குறித்து, மாணவ - -மாணவியருக்கு எடுத்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து, மண்வளம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் பாபு மற்றும் வேளாண் துறையினர் பங்கேற்றனர்.