sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் மஞ்சள்நீர் கால்வாய் சீரமைப்பு பணி...மந்தம்!:20 சதவீதம் மட்டுமே முடிந்திருப்பதால் அதிருப்தி

/

காஞ்சியில் மஞ்சள்நீர் கால்வாய் சீரமைப்பு பணி...மந்தம்!:20 சதவீதம் மட்டுமே முடிந்திருப்பதால் அதிருப்தி

காஞ்சியில் மஞ்சள்நீர் கால்வாய் சீரமைப்பு பணி...மந்தம்!:20 சதவீதம் மட்டுமே முடிந்திருப்பதால் அதிருப்தி

காஞ்சியில் மஞ்சள்நீர் கால்வாய் சீரமைப்பு பணி...மந்தம்!:20 சதவீதம் மட்டுமே முடிந்திருப்பதால் அதிருப்தி


ADDED : நவ 07, 2024 12:51 AM

Google News

ADDED : நவ 07, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் மிக பழமையான மஞ்சள்நீர் கால்வாய், 40 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் மந்த கதியில் நடக்கிறது. சீரமைப்பு பணிகள் துவங்கி, 3 மாதங்களுக்கு மேலான நிலையில், இதுவரை 20 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளதால், நகரவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில், பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பாகவே, மஞ்சள் நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாய் கைலாசநாதர் கோவில் அருகே உள்ள, புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.

நகரின் அனைத்து பகுதிகளையும் கடந்து செல்லும் இக்கால்வாய், 25 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. அப்போது, கால்வாய்யோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கால்வாயின் இருபுறமும் கருங்கற்கள் கொண்டு தடுப்பு சுவர் கட்டப்பட்டது.

கால்வாயின் இருபுறம் உள்ள தடுப்பு சுவர்கள், 25 ஆண்டுகளில், சிறிது, சிறிதாக சேதமடைந்த காரணத்தால், புதிதாக கால்வாய் சீரமைத்து, இருபுறமும் கான்கிரீட் தடுப்பு சுவர் மற்றும் மூடு கால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

இதற்காக, 40 கோடி ரூபாய் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, தமிழக அரசு கடந்தாண்டு நிதி ஒதுக்கீடு செய்தது. நிதி ஒதுக்கிய பின், கடந்த பிப்ரவரி மாதம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, இத்திட்டத்திற்கு காஞ்சிபுரத்தில் அடிக்கல் நாட்டினார்.

மஞ்சள்நீர் கால்வாய் மீது கான்கிரீட் மூடி அமைக்கப்பட்டு, மூடுகால்வாயாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின், மூடுகால்வாய் அமைக்கப்படாது என, மாநகராட்சி நிர்வாகம் முடிவை மாற்றியது. திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் மாற்றியது நகரவாசிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மூன்று மாதங்கள் முன்பாக ஆனந்தாபேட்டையில் இருந்து, திருக்காலிமேடிற்கு செல்லும் பிரதான சாலையோரம் உள்ள மஞ்சள் நீர் கால்வாயில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி துவங்கி நடக்கிறது.

அதேபோல, பல்லவர்மேடு பகுதியிலும் சுவர் கட்டும் பணி நடக்கிறது. இந்த கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெறாமல், மந்தமாக நடப்பதால், ஒரு பக்க தடுப்பு சுவர் கட்டவே மூன்று மாதங்கள் மேலாவதாக நகரவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். கால்வாயின் அகலத்தையும் பல இடங்களில் குறைப்பது, நகரவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு பக்கமும் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டுவது மட்டுமல்லாமல், கால்வாயின் தரையிலும் கான்கிரீட் அமைக்க வேண்டும். 2023 ஜூலை மாதம் துவங்கிய கால்வாய் சீரமைப்பு பணிகள், அடுத்த ஒராண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், 3 மாதங்களாகியும் வேகமெடுக்காத சுவர் கட்டும் பணிகள் எப்போது முடிவடையும் என, நகரவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

பணி நடைபெறும் இடத்தில், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. திட்டத்தின் பெயர், திட்ட மதிப்பு, எப்போது துவங்கியது, எப்போது முடியும் என, அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. சாலையோரம் போதுமான தடுப்புகளும் அமைக்கவில்லை.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதிகளில், இரவில் வேகமாக செல்லும் வாகனங்கள் கால்வாய் கட்டுமானப் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மழைக்காலம் என்பதால், கட்டுமான பகுதிகள் பாதுகாப்பின்றி உள்ளது.

எனவே, மஞ்சள்நீர் கால்வாயில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவும், பணி நடக்கும் இடத்தில், விபத்தை தவிர்க்க சாலையோரம் தடுப்பு மற்றும் திட்டம் பற்றிய அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறுகையில், ''மஞ்சள் நீர் கால்வாய் கட்டுமானப் பணி 20 சதவீதம் பணி முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,''கால்வாயின் இருபுறமும் சிமென்ட் கல் பதிக்க திட்டமிட்டுள்ளோம். நடைபாதை போல, அவை அழகாக இருக்கும். அடுத்த ஒராண்டிற்குள் கால்வாய் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். மழை குறுக்கிடாமல் இருக்க வேண்டும். இப்போதே பணிகள் வேகமாக தான் நடக்கிறது,'' என்றார்.

மஞ்சள் நீர் கால்வாய் சீரமைக்கும் பணி மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. அதை விரைவாக சீரமைக்க முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் பல இடங்களில் இருந்த வரும் மழைநீர், இக்கால்வாயில் கலக்கிறது. எனவே, சீரமைப்பு பணியை வேகமாக முடிக்க வேண்டும். கால்வாயின் அகலத்தை குறைக்கின்றனர். மழைநீர் அதிகம் வரும்போது கால்வாயிலிருந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளது. அகலத்தை குறைக்காமல், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

- தி.மோகன்,

காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us