/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவியருக்கு யோகா பயிற்சி துவக்கம்
/
மாணவியருக்கு யோகா பயிற்சி துவக்கம்
ADDED : ஜூலை 13, 2025 10:27 PM
காஞ்சிபுரம்:தேவரியம்பாக்கம் கிராமப்புற மாணவியருக்கு, யோகா பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் ரெனால்டு நிசான் நிறுவனம் ஆகியவை இணைந்து, கிராமிய சேவை திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏழு மாதங்கள் நடைபெற உள்ளன.
இத்திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார்.
யோகா பயிற்சியாளர்கள் சற்குணம் மற்றும் சிவசங்கரி, கிராமப்புற மாணவியருக்கு யோகா கலை குறித்து, இலவச பயிற்சி மற்றும் அதன் நன்மைகளை எடுத்துரைத்தனர்.
தேவரியம்பாக்கம் பொது மருத்துவர் வசுமதி, கிராமப்புற மாணவியருக்கு மன நல ஆலோசனைகளை வழங்கினார்.
அதை தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் மற்றும் யோகா சிறப்பு வகுப்புகள் நடந்தன.
இதில், உலக சமுதாய சேவா சங்க காஞ்சிபுரம் மண்டல செயலர் உமாமகேஸ்வரன், ரெனால்டு நிசான் நிறுவன இயக்குநர் கேசவன் உட்பட பலர் பங்கேற்றனர்.