/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி சஹானா யோகா சென்டர் சிறப்பிடம்
/
யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி சஹானா யோகா சென்டர் சிறப்பிடம்
யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி சஹானா யோகா சென்டர் சிறப்பிடம்
யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி சஹானா யோகா சென்டர் சிறப்பிடம்
ADDED : ஆக 04, 2025 11:50 PM

காஞ்சிபுரம்,காஞ்சிபுரத்தில் நடந்த, 'சவுத் இந்தியா யோகாசன சாம்பியன்ஷிப்' போட்டியில், காஞ்சி சஹானா யோகா சென்டர் மாணவ - மாணவியர் ஏழு பேர் முதல் பரிசும், ஏழு பேர் இரண்டாம் பரிசும் பெற்றனர்.
சவுத் இந்தியா யோகாசன சாம்பியன்ஷிப் - 2025 போட்டி, காஞ்சிபுரத்தில் ஆக., 2, 3 ஆகிய நாட்களில் நடந்தது. இதில், திருக்காலிமேடு சஹானா யோகா சென்டர் சார்பில், 14 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், அவிஷ், தனிஷ்கா, சேது மாதவன், சத்யநாதன், பாரதி, சந்தோஷ், அனைத்து வயதினர் பிரிவு போட்டியில், பாரதி, 54, ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். அகிலன், தஷ்வந்த், அகிலேஷ், பொற்செழியன், லிங்கேஷ், பிரபலிகா, சரண் ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர்.
பரிசு பெற்ற மாணவ - மாணவியரை, ஸ்ரீநாராயணகுரு யோகா சென்டர் ஆசிரியர் யுவராஜ், சஹானா யோகா சென்டர் நிறுவனர் நிர்மல் குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.