/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
/
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 18, 2025 08:27 PM
காஞ்சிபுரம்:பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் திட்டம், முதன்மை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வங்கி, நிதிச் சேவைகள், தகவல் மற்றும் மென்பொருள் மேம்பாடு, தளவாடங்கள் உற்பத்தி மற்றும் தொழில்துறை ஆகிய துறைகளில் அரசு 12 மாத கட்டணமில்லா பயிற்சி வழங்குகிறது.
பத்தாம் வகுப்பு பிளஸ் 2, ஐ.டி.ஐ., பட்டய படிப்பு மற்றும் பட்ட படிப்பு முடித்த 21 - 24 வயது வரை உள்ள மாணவ - மாணவியர் https://pminternship.mca.gov என்ற இணைய தள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு கல்வித்தகுதியில், 237 இளைஞர்களுக்கும், பிளஸ் 2 கல்வித் தகுதியில் 49 இளைஞர்களுக்கும், டிப்ளமோ கல்வித் தகுதியில் 4,001 இளைஞர்களுக்கும், பட்டப்படிப்பு கல்வித்தகுதியில், 119 இளைஞர்களுக்கும், ஐடிஐ கல்வித்தகுதியில் 359 இளைஞர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சிக்கு, மார்ச் 31ம் தேதி விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு மாதம் 5,000 ஊக்கத்தொகை மற்றும் மற்றும் அத்தியாவசிய தேவைக்கு ஒரு முறை மட்டும் மானியமாக 6,000 ரூபாய் வழங்கப்படும்.
மேலும், விபரங்களுக்கு காஞ்சிபுரம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.