/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளிக்கு நடந்து சென்ற சிறுமிடம் அத்துமீறிய வாலிபர் கைது
/
பள்ளிக்கு நடந்து சென்ற சிறுமிடம் அத்துமீறிய வாலிபர் கைது
பள்ளிக்கு நடந்து சென்ற சிறுமிடம் அத்துமீறிய வாலிபர் கைது
பள்ளிக்கு நடந்து சென்ற சிறுமிடம் அத்துமீறிய வாலிபர் கைது
ADDED : ஆக 20, 2025 02:02 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, பள்ளிக்கு நடந்து சென்ற 6ம் வகுப்பு சிறுமியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலை சிறுமி, வழக்கம் போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றார்.
அங்கு, தொகுப்பு வீடுகள் கட்டுமான பணிக்காக, வடமாநில இளைஞர்கள் தங்கி பணிபுரியும் பகுதியை கடக்கும் போது, அவ்வழியாக வந்த வடமாநில நபர் ஒருவர், சிறுமியை வழிமறித்து, வாயை பொத்தி அருகே உள்ள முட்புதருக்கு துாக்கி சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமி கூச்சலிடவே, அந்நபர் அங்கிருந்து தப்பினார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சுங்குவாார்சத்திம் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்படி, அதே பகுதியில் கட்டட வேலை செய்து வந்த, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சாகித், 35, என்பரை கைது செய்து, சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.