/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் 'போக்சோ'வில் கைது
/
மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் 'போக்சோ'வில் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் 'போக்சோ'வில் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் 'போக்சோ'வில் கைது
ADDED : பிப் 15, 2024 01:04 AM

சென்னை:ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை அளித்த நபரை, போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோயம்பேடைச் சேர்ந்த பெண் ஒருவர், கோயம்பேடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தன் மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருவதாகவும், வீட்டில் வைத்திருந்த 30,000 ரூபாய் மற்றும் ஏ.டி.எம்., கார்டுடன் மகளை காணவில்லை எனவும் புகார் அளித்திருந்தார்.
போலீஸ் விசாரணையில், அதே பகுதியில் உள்ள,'பேக்கரி'யில் வேலை செய்து வந்த சதாசிவம், 24, என்பவர், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது தெரிந்தது.
இதையடுத்து, அந்த நபரின் மொபைல்போன் எண் சிக்னல் வாயிலாக விசாரித்த போது, சேலத்தில் இருப்பது தெரிந்தது. சேலம் சென்ற போலீசார், இருவரையும் மீட்டு, நேற்று சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, வீட்டில் இருந்த பணத்தை எடுத்து வருமாறு கூறியதும், அந்த பணத்தில் மூன்று நாட்கள் பல்வேறு இடங்களில் இருவரும் சுற்றியதும் தெரிந்தது.
இதையடுத்து, சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், பாலியல் தொல்லை கொடுத்த சதாசிவத்தை 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

