ADDED : ஜன 07, 2025 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார் : சுங்குவார்சத்திரம் அருகே காந்துார் கிராமம், மேட்டுகாலனியைச் சேர்ந்தவர் சிவா, 28. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் சுங்குவார்சத்திரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் வந்தார். சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வடமங்கலம் அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி மோதி கீழே விழுந்தார்.
இதில், தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.