/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டூ - வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி
/
டூ - வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி
ADDED : பிப் 11, 2025 08:25 PM
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் தாலுகா படூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன், 39. இவர், உறவினரின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக, மாகரல் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.
வயலக்காவூர் சாலையில், ஆதவப்பாக்கம் வழியாக சென்றபோது, நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து ஜெயசந்திரன் விழுந்தார். இதில், படுகாயமடைந்தவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில், ஏற்கனவே உயிரிழந்த தெரியவந்தது. இதுகுறித்து, அவரது மனைவி நதியா, மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாகரல் போலீசார் விசாரிக்கின்றனர்.