/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாகன விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
/
வாகன விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 29, 2025 12:17 AM
வாலாஜாபாத், முத்தியால்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் எதிரே வந்த வாகனம் மோதி உயிரிழந்தார்.
வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சி, ஆம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைய சேகர் 28. கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு வாலாஜாபாத்தில் இருந்து, காஞ்சி புரம் நோக்கி, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது முத்தியால்பேட்டை சாலையில் சென்றபோது மசூதி அருகே எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த இளையசேகரை அப்பகுதியினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த இளைய சேகர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.