/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
அலையில் சிக்கி கவிழ்ந்த 2 மீன்பிடி படகுகள் 12 மீனவர்கள் மீட்பு
/
அலையில் சிக்கி கவிழ்ந்த 2 மீன்பிடி படகுகள் 12 மீனவர்கள் மீட்பு
அலையில் சிக்கி கவிழ்ந்த 2 மீன்பிடி படகுகள் 12 மீனவர்கள் மீட்பு
அலையில் சிக்கி கவிழ்ந்த 2 மீன்பிடி படகுகள் 12 மீனவர்கள் மீட்பு
ADDED : செப் 07, 2024 07:06 AM
நாகர்கோவில் : கன்னியாகுமரி அருகே பெரிய அலையில் சிக்கி இரண்டு மீன்பிடி படகுகள் கவிழ்ந்தன. 12 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
கன்னியாகுமரி அருகே கோவளம் டி.சி. நகரை சேர்ந்தவர் ரெம்ஜியூஸ் 58. இவருக்கு சொந்தமான படகில் இவரும், ஐந்து மீனவர்களும் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மீன் பிடிக்க சென்றனர். காலை 7: 15 மணிக்கு மீன் பிடித்து விட்டு கரையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது பெரிய அலையில் சிக்கி இவரது படகு கவிழ்ந்தது.
இது பற்றி தகவல் அறிந்த பிற மீனவர்கள் அப்பகுதிக்கு மாற்றுப் படகில் சென்று மீனவர்களை மீட்டு வந்தனர்.
சின்ன முட்டத்தை சேர்ந்தவர் ஜெரோம் 50. இவர் தனது படகில் ஐந்து மீனவர்களுடன் நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்று காலை 7:15 மணிக்கு கோவளம் கடற்கரை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தபோது பெரிய அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது, படகில் இருந்த ஆறு மீனவர்களும் மீட்கப்பட்டனர்.
இரண்டு படகுகளிலும் இருந்த 3 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்களும், மீன்பிடி தளவாடங்களும் வலையும் சேதமடைந்தன.