/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மிஸ்டு கால் காதல் போடி பெண்ணை திருமணம் செய்த குமரி இளைஞர்
/
மிஸ்டு கால் காதல் போடி பெண்ணை திருமணம் செய்த குமரி இளைஞர்
மிஸ்டு கால் காதல் போடி பெண்ணை திருமணம் செய்த குமரி இளைஞர்
மிஸ்டு கால் காதல் போடி பெண்ணை திருமணம் செய்த குமரி இளைஞர்
ADDED : நவ 01, 2025 02:55 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே வில்லுக்குறி குதிரைப்பந்தி விளையைச் சேர்ந்தவர் சுரேஷ் 33. நாகர்கோவில் மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தில் டிரைவராக உள்ளார். சில மாதங்களுக்கு முன் இவரது அலைபேசியில் ஒரு மிஸ்டு கால் வந்தது. திரும்ப அழைத்தபோது இளம்பெண் ஒருவர் எடுத்து தவறுதலாக அழைத்து விட்டதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
பின்னர் மீண்டும் சுரேஷ் அழைக்க இருவரும் பேசி பேசி அது காதலாக மாறியது. அப்போது அவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த கவுரி 24, என்பதும் தெரியவந்தது. இருவரும் போடி அருகே கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்த பின்னர் வில்லுக்குறியில் உள்ள வீட்டுக்கு சென்றனர்.
கவுரி காணாமல் போனது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இரணியல் போலீசார் கொடுத்த தகவலின் பேரில் பெண்ணின் பெற்றோர் வந்து பெண்ணிடம் சமாதானம் பேசியும் ஏற்கவில்லை. இரண்டு பேரும் ஒரு வாரத்தில் பதிவு திருமணம் செய்து சான்றிதழை ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் அனுப்பி வைத்தனர்.

