/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
வழிப்பறி வழக்கில் கைதான 17 வயது சிறுவன் மீது 20 வழக்குகள்
/
வழிப்பறி வழக்கில் கைதான 17 வயது சிறுவன் மீது 20 வழக்குகள்
வழிப்பறி வழக்கில் கைதான 17 வயது சிறுவன் மீது 20 வழக்குகள்
வழிப்பறி வழக்கில் கைதான 17 வயது சிறுவன் மீது 20 வழக்குகள்
ADDED : ஆக 07, 2024 10:03 PM
நாகர்கோவில்:வழிப்பறி வழக்கில் கைதான 17 வயது சிறுவன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதை அறிந்த போலீசார் திகைப்படைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கொத்தையார் திட்ட தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் 48. நகை பட்டறை வைத்துள்ளார். இவர் ஆக.,4ல் இருசக்கர வாகனத்தில் ஆசிரமம் சோழன் திட்டை அணை அருகே வந்தபோது மூன்று பேர் கும்பல் வழிமறித்து 14 கிராம் தங்கச் நகையை பறித்து சென்றனர். ஐயப்பன் சுசீந்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணையில் மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் இருவருக்கு 17 வயது. மேலராமன் புதுாரைச் சேர்ந்தவர்கள். ஒருவருக்கு 18 வயது. ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்தவர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வடசேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட புளியடி நான்கு வழி சாலை பகுதியில் பீஹாரைச் சேர்ந்த சிக்கந்தர் 25, என்பவரிடம் அலைபேசியை பறித்தது தெரியவந்தது.
வழிப்பறியில் ஈடுபட்ட ஒரு சிறுவனின் தாய் இந்துராணி 42, அவரது இரண்டாவது கணவர் சதீஷ் 38, மற்றும் முருகன் 39, ஆகியோரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பகலில் பாத்திரங்கள் விற்பது போல் வீடுகளுக்கு செல்லும் அவர்கள் இரவில் அந்த வீடுகளில் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்,
17 வயது சிறுவர்களில் ஒரு சிறுவன் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பல வழக்குகளில் கைதான அவர்கள் சிறுவர்கள் என்ற காரணத்தால் ஜாமீன் பெற்று மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.