/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சிறுவனிடம் சீண்டல் மத போதகர் கைது
/
சிறுவனிடம் சீண்டல் மத போதகர் கைது
ADDED : ஆக 05, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்: 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத போதகரை 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கிறிஸ்தவ சபை ஒன்றில் மூலச்சல் பகுதியைச் சார்ந்த வர்கீஸ் 55 போதகராக உள்ளார். இவர் வேதாகம வகுப்பிற்கு வந்த தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 17 வயது சிறுவன் தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வர்கீசை நேற்று கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.