/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கியூ.ஆர்., குறியீடை மாற்றி ரூ.23 லட்சம் மோசடி
/
கியூ.ஆர்., குறியீடை மாற்றி ரூ.23 லட்சம் மோசடி
ADDED : செப் 04, 2024 01:43 AM
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெள்ளிகோட்டைச் சேர்ந்தவர் லாசர், 67. பத்மநாபபுரம் ரோட்டில் பெட்ரோல் பங்க் நடத்துகிறார். இங்கு திங்கள் சந்தையைச் சேர்ந்த நிஜில் பிரேம்சன், 28, மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
பங்க்கில் உரிமையாளரின் கியூ.ஆர்., ரகசிய கோடை மாற்றி, தன் பெயரில் வாங்கிய கியூ.ஆர்., ரகசிய கோடை வைத்து வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுள்ளார்.
கணக்குகளை ஆய்வு செய்தபோது 23 லட்ச ரூபாய் மோசடி நடந்தது தெரிந்தது. இதுகுறித்து தக்கலை போலீசில் லாசர் புகார் செய்தார். நிஜில் பிரேம்சன் தலைமறைவானார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையம் அருகே இவரது அலைபேசி சிக்னல் காட்டியதைத் தொடர்ந்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் பிரேம்சனை கைது செய்தனர். அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது.