/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
283-வது குளச்சல் போர் வெற்றி தினம் ராணுவ வீரர்கள் மரியாதை
/
283-வது குளச்சல் போர் வெற்றி தினம் ராணுவ வீரர்கள் மரியாதை
283-வது குளச்சல் போர் வெற்றி தினம் ராணுவ வீரர்கள் மரியாதை
283-வது குளச்சல் போர் வெற்றி தினம் ராணுவ வீரர்கள் மரியாதை
ADDED : ஜூலை 31, 2024 09:08 PM

நாகர்கோவில்:குளச்சல் கடற்கரையில் டச்சுப் படையை திருவிதாங்கூர் படை வென்ற 283 வது ஆண்டு வெற்றி நினைவு தினத்தில் வெற்றித் துாணுக்கு ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.
திருவிதாங்கூர் ராஜ்யத்தின் மீது டச்சுப் படையினர் படையெடுத்து வருவதை அறிந்த திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா பனை மரங்களை வெட்டி மாட்டு வண்டியில் சாய்த்து வைத்து பீரங்கி போல கடற்கரையில் அணிவகுக்கச் செய்தார். குளச்சல் துறைமுகத்தில் கப்பலில் வந்த டச்சுப் படையினர் கடற்கரையில் பீரங்கி படை நிற்பதை கண்டு திருவிதாங்கூர் படையிடம் சரணடைந்தனர். 1741 ஜூலை 31-ல் இது நடைபெற்றது.
இந்த தினத்தை குளச்சல் போர் வெற்றி தினமாக கொண்டாடுகின்றனர். நேற்று மெட்ராஸ் ரெஜிமெண்ட் இரண்டாவது பட்டாலியன் சார்பில் வெற்றித் துாணில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மேஜர் பகஜத்சிங், கர்னல் ஏ.கே.சிங், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தேவாரம், ப்ரிகேடியர் அருமைநாயகம், கேனல் ஆர்.அனில் குமார், குமரி மாவட்ட ராணுவ வீரர்கள் நலஅமைப்பு மேஜர் ஜெயக்குமார், குளச்சல் நகராட்சி கமிஷனர் செந்தில்குமார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.