ADDED : மார் 09, 2025 02:44 AM
நாகர்கோவில்: மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தைக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து, நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரத்தை சேர்ந்த மீனவருக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகளாகின்றன. 13 வயதில் மகள் உள்ளார். 2022 மார்ச் 20ல் வீட்டில் மகள் தனியாக இருந்த போது அவர் குடிபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமி, நடந்ததை தாயிடம் கூறினார்.
தாய் புகாரில் தந்தையின் மீது, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். நாகர்கோவில் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தரையா, வழக்கை விசாரித்து சிறுமியின் தந்தைக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.