/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
விவேகானந்தர் மண்டபம் 54 வது ஆண்டு விழா
/
விவேகானந்தர் மண்டபம் 54 வது ஆண்டு விழா
ADDED : செப் 03, 2024 02:48 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 54 வது ஆண்டு விழா நேற்று நடந்தது.
சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி கடலில் நீந்தி சென்று தவம் செய்த பாறை மீது 1964ல் நினைவு மண்டபம் கட்டும் பணி தொடங்கியது. ஆறு ஆண்டுகள் நடைபெற்ற இந்த பணி நிறைவு பெற்று 1970 செப்டம்பர் இரண்டாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த மண்டபத்தை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். 53 ஆண்டுகள் நிறைவு பெற்று 54வது ஆண்டு நேற்று தொடங்கிய நிலையில் காலை 9:25 மணிக்கு முதன் முதலாக படகில் வந்து இறங்கி மண்டபத்துக்குள் நுழைந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த நிலேஷ் எம் பட்டேல் என்ற சுற்றுலா பயணிக்கு விவேகானந்தா கேந்திரா சார்பில் பொறுப்பாளர் ஆர். சி. தாணு, மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் ஆகியோர் பரிசு வழங்கினர்.
53 ஆண்டுகளில் ஏழு கோடியே 21 லட்சத்து 37 ஆயிரத்து 857 பேர் இந்த மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். ஆக.31, செப்.1 இரண்டு தினங்களில் மட்டும்11 ஆயிரத்து 152 சுற்றுலா பயணிகள் மண்டபத்தை பார்வையிட்டனர்.